| ADDED : ஆக 28, 2026 06:53 PM
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் நேரு பேசியதாவது: புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இ– கே.ஓய்.சி., என்ற பல்வேறு டிஜிட்டல் முறையை பயன்படுத்துகிறது. இதனால், முதியவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கைரேகை சரியாக பதிவாகாத சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. ஆகையால், பணத்திற்கு பதிலாக பொருட்கள் வாங்க வேண்டும் என, கேட்கின்றனர். எனவே, மக்களை அலைகழிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த வேண்டாம். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அன்பழகன், மத்திய அரசின் இலவச அரிசிக்கு பதிலாக டிஜிட்டல் நாணயம் வழங்கும் திட்டத்தால், புதுச்சேரி முழுதும் 38 ஆயிரம் ரேஷன் கார்டுகள் ரத்தாகி உள்ளது. ஆகவே அமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் அவர்களின் ரேஷன் கார்டுகளை பதிவு செய்வதற்கு கால அவகாசத்தையும் நீட்டிக்க வேண்டும். அமைச்சர் சிவகொழுந்து, ‘இந்த கோரிக்கை ஏற்கப்படுகிறது. அதற்கான ஆய்வு நடத்தப்பட்டு, நாளை(29ம் தேதி) உரிய பதில் வழங்கப்படும்’ என்றார்.