சட்டசபை கட்ட தலைமை செயலர் தடை சபாநாயகர் செல்வம் குற்றச்சாட்டு
புதுச்சேரி, : புதுச்சேரி சட்டசபை கட்டுவதற்கு தலைமை செயலர் தடையாக உள்ளதாக சபாநாயகர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.அவர், கூறியதாவது:புதுச்சேரி அமைச்சர் குறித்து எந்த குற்றச்சாட்டோ, நடவடிக்கை எடுக்கக்கோரிய புகார் மனுவோ அல்லது அதற்கான கோப்போ என்னிடம் வரவில்லை. தவளகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் பெண் ஒருவர் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., உட்பட 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பல்லைக்கழகத்தில் 25 சதவீதம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பொதுக்கணக்குக்குழு தேசிய அளவிலான மாநாடு உடன் நடக்கவுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். மத்திய அரசிடம் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.4,000 கோடி நிதி வேண்டும் என, முதல்வர் தொடர்ச்சியாக கடிதம் எழுதி வருகிறார். மத்திய அரசு நாம் கேட்காமலேயே ரூ.200 கோடி வழங்கியுள்ளது. நிடி ஆயுக் கூட்டத்திற்கு செல்லாததால் மாநில வளர்ச்சி எந்தவிதத்திலும் பாதிக்காது.சட்டசபை கட்டுவதற்கு தலைமைச் செயலர் தடையாக உள்ளார். இருக்கும் பகுதியில் சட்டசபையும், தலைமை செயலகமும் இருக்க வேண்டும் என நினைத்து தடுத்து வருகிறார். அவரை மீறி கவர்னர் மூலம் அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்.ஓரிரு மாதங்களுக்குள் முதற்கட்டமாக சட்டசபை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும். தலைமை செயலருக்கு அவரது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள அறிவறுத்தப்பட்டுள்ளது' என்றார்.