உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விளையாட்டு போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி: தவளக்குப்பம் ராஜிவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.புதுச்சேரி, தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு துறை சார்பில், 2024ம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் ஆதவன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொ) ஹன்னா மோனிஷா தலைமை தாங்கினார்.புதுச்சேரி பல்கலைக்கழக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு துறை பேராசிரியர் இளையராஜா, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை