உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்

மாநில அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்

திருக்கனுார் : வம்புப்பட்டு அப்துல்கலாம் கைப்பந்து விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியினை அமைச்சர் நமச்சிவாயம் சீருடைவழங்கி துவக்கி வைத்தார்.திருக்கனுார் அடுத்த வம்புப்பட்டு அப்துல்கலாம் கைப்பந்து விளையாட்டு கழகம் சார்பில் 3ம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நேற்று துவங்கியது.ஐய்யனாரப்பன் கோவில் அருகேயுள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியை அமைச்சர் நமச்சிவாயம், வீரர்களுக்குசீருடை வழங்கி துவக்கி வைத்தார்.இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், பா.ஜ., நிர்வாகிகள் தமிழ்மணி, சுமன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இரண்டு நாட்கள் இரவு- பகலாக நடக்கும் போட்டியில், புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதியை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொள்கின்றன.இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15, 000, 2ம் பரிசாக ரூ. 10,000, மூன்றாம் பரிசாக ரூ.8000உள்ளிட்ட மொத்தம் 6பரிசுகள் மற்றும்ஆட்டநாயகன் விருது வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி