மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
வில்லியனுார்: வடமங்கலம் பகுதியில் தற்காலிக இணைப்பு சாலையில் புழுதி பறப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சுவாச நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இரவும், பகலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த சாலையில் வில்லியனுார் அருகே, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமையான பாலத்திற்கு மாற்றாக, ரூ. 70 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், எம்.என்.குப்பத்தில் துவங்கி, இந்திரா சிக்னல் வரை சென்டர் மீடியன், இருபுறத்திலும் கழிவுநீர் வாய்க்கால், சாலைவிரிவாக்கத்துடன் புதிய தார் சாலை உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது.வில்லியனுார் அருகே, புதிய மேம்பாலம் கட்டும் பணி நிறைவு பெற்ற நிலையில், இரு பகுதியிலும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.வடமங்கலம் பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் பணிக்காக, சுமார் 300 மீட்டர் துாரத்திற்கு தற்காலிக மண் சாலை அமைத்துள்ளனர்.இதில் கனரக வாகனங்கள் செல்லும்போது எழுகின்ற புழுதியால் மற்ற வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். குறிப்பாக, புழுதி புயலால் இருசக்கர வாகன ஓட்டிகள்சுவாச நோய் தொற்றுக்கு ஆளாகி சிரமப்படுகின்றனர். மேலும், இந்த சாலையில் ஓயாமல் புழுதி பறப்பதால், ஆங்காங்கே ஏற்பட்டுள்ள பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு சரிவர தெரிவதில்லை.இதனால், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பள்ளங்களில் விழுந்து சேதமடைகின்றன.மேம்பாலத்தின் இணைப்பு சாலை அமைக்கும் பணி மாதக்கணக்கில் தொடர்கிறது.இதனால், வடமங்கலம் பகுதியில் உள்ள 300 மீட்டர் துாரத்திற்கு தற்காலிகமாக தார் சாலை அமைத்து, வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் சுவாச நோய்களில் இருந்து நெடுஞ்சாலைகள் கோட்ட அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago