மேலும் செய்திகள்
பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
05-Mar-2025
வில்லியனுார்:விபத்து வழக்கில் எப்.ஐ.ஆர்., நகலுக்கு லட்சம் கேட்ட வில்லியனுார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.புதுச்சேரி, சேதராப்பட்டு அடுத்த தமிழக பகுதியான கடப்பேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ். குயிலாப்பாளையம் குணசேகரன், செந்தில். மூவரும் கடந்த மாதம் 12ம் தேதி இரவு 9:00 மணியளவில் பத்துக்கண்ணு பகுதியில் இருந்து சரண்ராஜின் பல்சர் பைக்கில் சேதராப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள ஜே.பி.ஏ., இரும்பு கம்பனி வளைவு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்திருத்த டாரஸ் லாரி மீது பைக் மோதியது. இதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கடப்பேரிக்குப்பம் சரண்ராஜின் சகோதாரர் முத்து, சில வாரங்களுக்கு முன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் எப்.ஐ.ஆர்., நகல் கேட்டார். அதற்கு சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் முத்து புகார் தெரிவித்தார்.அதன்பேரில், டி.ஜி.பி., ஷாலினி சிங், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரை கடந்த சில தினங்களுக்கு முன், ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். தொடர் விசாரணைக்கு பிறகு நேற்று சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
05-Mar-2025