உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

அரியாங்குப்பம : அரியாங்குப்பம் படகு குழாம் பகுதியில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். படகு குழாம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் கஞ்சா பாக்கெட்டுகள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் நோணாங்குப்பத்தை சேர்ந்த செல்வவீரன், 20; (எ) பாம் வீரா என தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள 11 பாக்கெட்டுகள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி