| ADDED : மார் 03, 2024 05:17 AM
புதுச்சேரி: முன் விரோதத்தில் சிறுவனை கத்தியால் வெட்டிய இரு சிறுவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.லாஸ்பேட்டை, சாமிபிள்ளைத்தோட்டம் லெனின் நகரை சேர்ந்தவர் பாலு மகன் விமல்ராஜ், 17; ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்தவர்களுடன் மோதல் இருந்து வருகிறது.நேற்று மாலை விமல்ராஜ் அவரின் வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மறைத்து வைத்திருந்த கத்தியால், விமல்ராஜை தலை மற்றும் உடம்பு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியமாக வெட்டிவிட்டி தப்பிச் சென்றனர்.ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த விமல்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவலறிந்த லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரித்தனர். அதில், 17 வயதிற்குட்பட இரண்டு சிறுவர்கள் விமல்ராஜை கத்தியால் வெட்டியது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.