உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடையில் வேலை செய்த சிறுவன் தற்கொலை

கடையில் வேலை செய்த சிறுவன் தற்கொலை

புதுச்சேரி : விழுப்புரம், புதுப்பாளையம் முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ், டிரைவர். இவரது மகன் ஆகாஷ், 17; பாலிடெக்னிக் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வினோத் என்பவரின் பழக்கடையில் வேலை செய்து வந்தார்.கடையில் இருக்கும்போது, ஆகாஷ் மொபைல் போனில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால், அவரது உறவினர் கண்டித்தார். மனமுடைந்த ஆகாஷ், நேற்று முன்தினம் கடையின் மேல் தளத்தில் உள்ள கம்பியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த பெரியக்கடை போலீசார் ஆகாஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை