உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்: எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

புதுச்சேரி : கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; புத்தாண்டு உள்ளிட்ட விழா காலங்களில் அரசு கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அரசுக்கு மாநிலத்தின் வருவாய் மட்டுமே பிரதான நோக்கமாக இருக்க கூடாது.அரசு மற்றும் தனியார் மூலம் நடந்த கலை நிகழ்ச்சியில் வெளிமாநில மற்றும் உள்ளூர் மக்கள் குவிந்ததால் புதுச்சேரி திண்டாடியது. கடற்கரையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்த அரசு, பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்தது கண்டிக்கதக்கது.கடற்கரை, சுண்ணாம்பாறு போன்ற இடங்களில் அடிப்படை வசதிகள், பாதகாப்பு இல்லாததால் பொதுமக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகினர். கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடிய 4 மணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் துயரமானது. அனைவரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பாதுகாப்பு விஷயத்தில் அரசு அலட்சியமாக இருந்ததே இதற்கு காரணம். மாணவர் இறப்பிற்கு அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். வரும் காலத்தில் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல் அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி