உள்ளூர் செய்திகள்

உளவுத் துறை உஷார்

புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர், அரசியல் கட்சிகளுக்காக கொடி கட்டுவது, பேனர் வைப்பது போன்றவற்றில் நேரடியாக ஈடுபடுகின்றனர். கட்சி நிகழ்ச்சிகளிலும் எந்த தயக்கமும் இல்லாமல் நேரடியாக கலந்து கொள்கின்றனர்.மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர், சில கட்சிகளின் சித்தாந்தங்களை பரப்பும் கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்படுகின்றனர். பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் கருத்துக்களையும் பதிவிடுகின்றனர்.மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை விமர்சித்தும், பிரதமர் போன்ற மிகப் பெரிய பதவிகளில் உள்ளவர்கள் குறித்து கேலி சித்திரங்களை பதிவிட்டும் வருகின்றனர்.குறிப்பாக, புதுச்சேரி நகராட்சியில் பணிபுரியும் அதிகாரி தனது வாட்ஸ் ஆப் ஸ்டேஸ்களில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் மற்ற மதத்தினரை புண்படுத்தும் வகையில் வாசகங்களை பதிவிட்டு வருகிறார்.இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுபோல் அரசுக்கு எதிராகவும், மத உணர்வுகளை துாண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மத்திய உளவுத்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.சட்டரீதியான நடவடிக்கைகளும் விரைவில் பாய உள்ளது.அதுபோல, அரசியல் கட்சிகளுடன் நேரடியாக தொடர்பில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த தகவல்களும் திரட்டப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது.நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த சூட்டோடு சூடாக, அரசியல் செய்யும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை