உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என் தொகுதியில் இனி பேனருக்கு இடமில்லை எம்.எல்.ஏ., வைத்தியநாதன் அதிரடி அறிவிப்பு

என் தொகுதியில் இனி பேனருக்கு இடமில்லை எம்.எல்.ஏ., வைத்தியநாதன் அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி: இனி யாரும் எனக்கு லாஸ் பேட்டைத் தொகுதியில் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று எம்.எல்.ஏ., வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநிலம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட கலெக்டருக்கு தலைமை நீதிபதிக் கடிதம் எழுதியதற்காக அவருக்கு காங்., கட்சி தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம உள்ளது என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் நன்கறிவர்.இருப்பினும் அவர்களின் ஆதரவாளர்களால் வைக்கப்படுகின்ற பேனர்களை கட் அவுட்களை மற்றும் அலங்கார வளைவுகளை வேண்டாம் என்று சொல்வதற்கு தயாராக இல்லை.எதிரே வருகின்ற வாகனங்கள் தெரியாத அளவிற்கு சாலைக்கு நடுவே வைக்கப்படுகின்ற மெகா சைஸ் பேனர் கலாசாரத்தால் புதுச்சேரியின் அழகு நாளுக்கு நாள் கெட்டு வருகிறது.சிறு சிறு குடும்ப நிகழ்ச்சிகளுக்குக்கூட சாலையை அடைத்து மெகா சைசில் பேனர்கள் வைப்பதால் விபத்துக்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.எனவே ,இனி லாஸ்பேட்டைத் தொகுதியில் என் ஆதரவாளர்கள் யாரும் பேனரோ, கட்அவுட்டோ மற்றும் வளைவுகளோ வைக்க வேண்டாம்.குழந்தைகள், பெண்கள் வயதானவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லாஸ்பேட்டை தொகுதியில் வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் உடனே அப்புறப்படுத்தப்படும். மக்களை அச்சுறுத்தும் பேனர் மற்றும் கட்அவுட் இல்லாத மக்களைப் பாதுகாக்கும் முன் மாதிரியாக லாஸ்பேட்டைத் தொகுதி இருக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்