உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பால் தட்டுப்பாடு இல்லை பாண்லே நிர்வாகம் அறிவிப்பு

 பால் தட்டுப்பாடு இல்லை பாண்லே நிர்வாகம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு எதுவும் இல்லை என, பாண்லே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாண்லே மேலாண் இயக்குநர் செய்திக் குறிப்பு: மழை காரணமாக புதுச்சேரியில் பாண்லே பால் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. பாண்லேவில் கொள்முதல் மற்றும் விநியோக சங்கிலியில் எங்கும் பால் பற்றாக்குறை ஏற்படவில்லை. அனைத்து வழித்தடங்களிலும் பால் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது. அண்டை மாநிலங்களில் பால் கிடைப்பதில் ஏற்ற, இறக்கம் இருந்தாலும், பாண்லேவின் கொள்முதல், உற்பத்தி மற்றும் கள அலுவலர்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் தடையின்றி வழங்குவதை உறுதி செய்து வருகின்றனர். மேலும், நிலையான பால் வரத்து மற்றும் சீரான விநியோகத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் பற்றாக்குறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள பாண்லேவின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளை தொடர்பு கொள்ளலாம் என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்