உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி : புதுச்சேரி மார்கழி மஹோத்ஸவ கமிட்டி, ராமானுஜர் பரபக்தி இயக்கம் சார்பில் 12ம் ஆண்டு மார்கழி மாத மகா உற்சவம் கடந்த 17ம் தேதி துவங்கியது.இதையொட்டி, எல்லைப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் ஆலயத்தில் தினமும் மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை, விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் சேவித்தல், திருப்பாவை நடந்து வருகிறது.இதன் ஒருபகுதியாக நேற்று மாலை 3:00 மணிக்கு கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியின் பிரேமிகா திவ்ய நாம கீர்த்தனைகள் நடந்தது.தொடர்ந்து, மாலை 5:30 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர், சாரதா கலாமந்திர் குழுவினரின் நாச்சியார் திருமொழி வாரணமாயிரம் பரதம் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ