| ADDED : செப் 17, 2026 07:53 PM
வில்லியனுார்: சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மணிவேல், ஆசிரியை ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சத்தியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பாமகள் கவிதை, தீபிகா ஆகியோர் பங்கேற்று, புகையிலை பொருட்கள் மனித உடலிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் கடுமையான ஆபத்துகள் குறித்தும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பேசினர். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜூ, புகையிலை ஒழிப்பின் அவசியம் குறித்து பேசினார். மாணவர்கள் புகையிலை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.