| ADDED : ஜன 03, 2024 06:34 AM
புதுச்சேரி : திருக்காஞ்சி கோவிலில், உலக ஜீவராசிகளுக்கு பரமசிவன் - பார்வதி படி அளந்த திருவிழா இன்று நடக்கிறது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், காசியிலும் வீசம் பெற்ற தலமாக போற்றப்படும் காமாட்சி, மீனாட்சி சமேத கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கால பைரவர் சன்னிதியில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.தொடர்ந்து, உலக ஜீவ ராசிகளுக்கு பரமசிவன் - பார்வதி படி அளந்த திருவிழா நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கின்ற 'படி அளந்த திருவிழா' பிரசித்தப் பெற்றதாகும். அதை பின்பற்றி கடந்த சில ஆண்டுகளாக திருக்காஞ்சி கோவிலிலும் படி அளந்த திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.விழாவில் பங்கேற்று கங்கைவராக நதீஸ்வரரின் அருளை பெறுமாறு, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.