உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயான கொள்ளை உற்சவம் 

மயான கொள்ளை உற்சவம் 

திருக்கனுார் : திருக்கனுார் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது.திருக்கனுார் சிவன்கோவில் பின்புறம் புத்து வடிவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 19ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது.இதையொட்டி, மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முக்கிய நிகழ்வாக, மாலை 4:30 மணிக்கு மயான கொள்ளை உற்சவத்தை முன்னிட்டு, அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயன், காட்டேரி, பூங்கோத்தி நிசானி செடல் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.பின்னர், அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை