உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 6 தாசில்தார்கள் இடமாற்றம் 

6 தாசில்தார்கள் இடமாற்றம் 

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆறு தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி கலால் துறை துணை கலெக்டர் அலுவலக தாசில்தார் கோமன் ராஜாஜி, குடிமை பொருள் வழங்கல் துறைக்கும், அங்கிருந்த தாசில்தார் அய்யனார், கலால் துறை துணை கலெக்டர் அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இதேபோல், கலால் துறையில் மற்றொரு துணை கலெக்டர் அலுவலக தாசில்தார் பாலகிருஷ்ணன் சட்டமுறை எடையளவு துறைக்கும், நில அளவை துறை தாசில்தார் மணிகண்டன், வில்லியனுார் தெற்கு சப் கலெக்டர் அலுவலகத்திற்கும், அங்கிருந்த தாசில்தார் ஜோதிமணி, நில அளவை துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.கலால் துறை துணை கலெக்டர் அலுவலக மற்றொரு தாசில்தார் மாசிலாமணி உழவர்கரை நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை வருவாய் பேரிடர் துறையின் துணை கலெக்டர் வினயராஜ் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி