உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது

காரைக்கால் : பைக்கில் குட்கா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் போலீசார் நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் புருேஷத்தமன் தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, பைக்கில் மூட்டையுடன் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ததில், பைக்கில் குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது.விசாரணையில் கீழகாசாகுடியை சேர்ந்த சுரேஷ்பாபு,28; திருப்பட்டினம் தட்டார தெருவைச் சேர்ந்த முகமது அப்துல் கரீம்,26; எனத் தெரிய வந்தது.இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து சுரேஷ்பாபு உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி வந்த ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தி பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்