உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய பட்ஜெட்: வெங்கடேசன் எம்.எல்.ஏ., வரவேற்பு

மத்திய பட்ஜெட்: வெங்கடேசன் எம்.எல்.ஏ., வரவேற்பு

புதுச்சேரி : மத்திய பட்ஜெட் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட் என, வெங்கடேசன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட் ஆகும். இதில், வீடுகளில் சோலார் பேனல், மின்சார வாகனங்கள் உற்பத்தி, மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் என பசுமை எரிசக்திக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதை தடுக்க ஒன்பது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு தடுப்பூசி அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கக்தக்கது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். நடுத்தர மக்கள் சொந்த வீடு வாங்க அல்ல கட்டுவதற்கு உதவும் திட்டம், பெண்களுக்கு லட்சாதிபதி திட்டம், ஆஷா அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வரவேற்கத்தக்கது. நான்கு கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கல், 11 கோடி விவசாயிகளுக்கு மானியம் வழங்கல், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. வருமான வரியில் மாற்றம் இல்லை, விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது' என, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை