உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஊரல் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றம்

 ஊரல் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அதிரடியாக அகற்றம்

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் ஊரல் வாய்க்கால் ஆக்கிரமிப்பு நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்., ஆணையர் ரமேஷ் அதிரடி நடவடிக்கையால் அகற்றப்பட்டது. தவளக்குப்பம் - மடுகரை போக்குவரத்து சாலை புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலையாகவும் உள்ளது. இச்சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால் வழியாக நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஊரல் வாய்க்காலுக்கு சென்றது. ஊரல் வாய்க்காலை சிலர் மண் கொட்டி ஆக்கிரமித்து இருந்தனர். இதனால், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி, பல மாதங்களாக சாலையில்வழிந்தோடியது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இந்நிலையில் பா.ம.க., தொகுதி தலைவர் காந்திதாஸ் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து ஆணையருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில் பொதுப்பணித்துறை, கொம்யூ., பஞ்., ஊழியர்கள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் வாய்க்காலில் மண் கொட்டி அடைத்துள்ளதை நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் நெட்டப்பாக்கம் போலீசார் ஈடுபட்டனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி