உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அனுமதி இன்றி பேனர் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை

அனுமதி இன்றி பேனர் உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை

புதுச்சேரி: அனுமதியின்றி பேனர் வைக்கக்கூடாது என உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார் அவரது செய்திக்குறிப்பு; உழவர்கரை நகராட்சி பகுதியில் பேனர் மற்றும் விளம்பரம் போர்டு வைக்க உரிய அனுமதி பெற்று வைக்க வேண்டும். தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழையில் காற்றின் வேகம் அதிகரிக்கும். இதனால், பொது இடங்களில் பேனர் வைப்பது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். எனவே அனுமதி இல்லாமல் பேனர் வைக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. அனுமதியின்றி வைக்கப்படும் பேனரால் ஆபத்து ஏற்பட்டால், அந்த பேனர் வைத்தவர், பிரிண்ட் செய்தவர் மற்றும் பேனரை நிறுவிய ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் கட்டடங்கள் மீது விளம்பர பாதாகைகள் வைத்திருக்கும் நிறுவனங்கள் அதன் ஸ்திரத்தன்மை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் மேலும் புயல் எச்சரிக்கை காலங்களில் விளம்பர பதாகைகள் வைக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !