| ADDED : ஆக 20, 2026 05:11 PM
புதுச்சேரி: காரைக்காலில், வாழை நாரை பயன்படுத்தி மதிப்புக்கூட்டல் தயாரிப்பு மூன்று நாள் பயிற்சி காரைக்காலில் துவங்கியது. மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாட்டுத் திட்ட மையம் சார்பில் மத்திய சுற்றுச் சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நிதியுதவியுடன், வாழை நாரை பயன்படுத்தி சுற்றுசூழலுக்கு உகந்த மதிபுக்கூட்டப்ட்ட பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பில் மூன்று நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி காரைக்காலில் நடக்கிறது. நேற்று முன்தினம் நிகழ்ச்சியின் துவக்க விழா நடந்தது. காரைக்கால் இணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடபாரதி வரவேற்றார். காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரிநாதன், கவின் ஈகோ கிரீன் புராடக்ட்ஸ் தேனி மாவட்ட நிர்வாக இயக்குனர் ஜமீன்பிரபு வாழ்த்திப் பேசினர். புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் திறன்மேம்பாட்டு பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில்,வேளாண் கழிவுகளை பயனுள்ள மற்றும் மதிப்புகூட்டப்பட்ட பொருட்களாக மாற்றலாம். வாழை நாரை பயன்படுத்தி, சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிப்பதால், பெண்கள் நிலையான வாழ்வாதாரம், சுயதொழில் மற்றும் வருமானம் ஈட்ட முடியும். இப்பயிற்சியின் மூலம் சுயஉதவிக்குழு பெண்கள் சுயதொழில், சிறு தொழில் மற்றும் வீட்டு அடிப்படையிலான தொழில் முயற்சிகளாக மாற்றி கொள்ள வேண்டும். என்றார். புதுச்சேரி இ.ஐ.ஏ.சி.பி., மைய தகவல் தொழில்நுட்ப அலுவர் தினேஷ் நன்றி கூறினார்.