உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் பயன்படுத்திய பேட்டரி ஸ்கூட்டர் எங்கே?

போலீஸ் பயன்படுத்திய பேட்டரி ஸ்கூட்டர் எங்கே?

புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் ரோந்து பணிக்கு கார், பைக், சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வரிசையில் செல்ப் பேலன்சிங் பேட்டரிஸ்கூட்டரும் அறிமுகப்படுத்தப்பட்டது.கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்ட நேரங்களில் போலீசார் நடந்து ரோந்து செல்லும் போது சோர்வு ஏற்படுகிறது.இதனை தடுக்கவும், ரோந்து பணியை துரிதப்படுத்தவும் செல்ப்பேலன்சிங் பேட்டரி ஸ்கூட்டர் உதவும்.நாட்டிலேயே முதன் முறையாக போலீஸ் ரோந்து பணிக்கு பேட்டரி ஸ்கூட்டர் புதுச்சேரியில் பயன்படுத்தப்பட உள்ளது என போலீஸ் உயரதிகாரிகள் பெருமையாக முழங்கினர்.ஆனால், அதனை வாங்கிய போலீசாரே செல்ப் பேலன்சிங் பேட்டரி ஸ்கூட்டரை கண்டுக்கொள்ளவில்லை. கடற்கரையில் ரோந்துக்கு கூட எடுத்து செல்வதில்லை.செல்ப் பேலன்சிங் பேட்டரி ஸ்கூட்டர் மக்கர் செய்திருந்தால் அவற்றை சரி செய்து ஓட்டலாம். ஆனாலும் அதுவும் செய்யப்படவில்லை. எந்த ஒரு திட்டமும் முறையாக கண்காணிப்பு இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக அமையும். இந்தசெல்ப் பேலன்சிங் பேட்டரி ஸ்கூட்டர் எதற்காகஅறிமுகப்படுத்தப்பட்டது; ஏன் முடங்கி போனது என்பது போலீசாருக்கே வெளிச்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை