உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு துறைகளில் குடிமக்கள் சாசனம் புதுப்பிக்கப்படுமா?: பிராந்திய மொழிகளில் வைக்க வேண்டும்

அரசு துறைகளில் குடிமக்கள் சாசனம் புதுப்பிக்கப்படுமா?: பிராந்திய மொழிகளில் வைக்க வேண்டும்

பொதுமக்களுக்கும் சேவை உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் சாசனமாகிய 'குடிமக்கள் சாசனம்' கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்க்குள் மக்கள் சேவை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இது சம்பந்தமான தகவல் பலகை அரசு துறைகளில் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.இப்பலகையில் மக்கள் எந்தெந்த குறைகளுக்கு யாரை அணுக வேண்டும். யாரிடம் மனு கொடுக்க வேண்டும். இந்த மனுவுக்கு எவ்வளவு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.இவைகள் தவிர எந்தெந்த சான்றிதழ்கள் நகராட்சியால் வழங்கப்படும், அதற்கான கட்டணம் எவ்வளவு; எத்தனை நாளுக்குள் இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற விவரங்களும் இந்த தகவல் பலகையில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கும்.இந்த விவரங்களை முழுமையாக அறிவிப்புப் பலகையில் விளம்பரப்படுத்தி, மக்கள் பார்வையில்படும்படி துறை அலுவலங்களில் வாயில்களில் வைக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், புதுச்சேரி அரசின் பல துறை அலுவலகங்களில் இவற்றைக் காண முடியவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.பல துறைகளில் புதுப்பிக்கப்படாமல்2005 ஆண்டு வைக்கப்பட்ட மக்கள் சாசனமே பரிதாபமாக காட்சியளிக்கிறது.சில அரசு துறைகளில் மக்கள் சாசனம் வைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், அறிவிப்புப் பலகைகள் பலவும் சிதிலமாகி விட்டன.

இணையமும் மோசம்

ஆன்-லைன் சேவையாகிவிட்ட இக்காலத்தில்,குடிமக்கள் சாசனத்தை துறைகளில் தங்களது இணையதளத்திலும் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அரசு துறைகளில் மோசமாக உள்ளது. குடிமக்கள் சாசனத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வழியில் தமிழிலும், அந்த பிராந்திய மொழிகளிலும் வெளியிடுவதில்லை. மக்கள் அதை முன்வைத்து கேள்வி கேட்கிறார்கள் என்பதால், பல இடங்களில் அதிகாரிகளே அவற்றை அகற்றிவிட்டனர்.மறைப்பு வேலைகள்:சில அரசு துறைகளில் குடிமக்கள் சாசனத்தை மறைத்து வைத்துள்ளனர். அலுவலர்கள் தவறு செய்தால், தகவல் பலகையில் உள்ள விவரத்தை வைத்து கேள்வி கேட்க வசதியாக இருக்கும். ஆனால் யாருக்கும் பயன்தராத வகையில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது.

கண்டுகொள்ளாத உள்ளாட்சிகள்

நகராட்சி, கொம்யூன் பஞ்சாய்த்துகளில் பல ஆண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், பல அதிகாரிகள் அலுவலகத்திலேயே இருப்பதில்லை. எத்தனை நாட்களுக்குள் பணி முடிக்க வேண்டும் என தெரிவிக்கும் மக்கள் சாசனத்தை வைப்பதில்லை.அரசின் திட்டங்கள்பற்றி, கிராமத்தில் உள்ளவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் பார்வைக்கு திட்டங்களை கொண்டு செல்லவே, மக்கள் சாசனம் தயார் செய்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால்,அரசு துறைகளின் மெத்தன போக்கால் திட்டத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறவில்லை.சில துறைகள் மட்டுமேவிதிவிலக்காக புதுப்பித்து வருகின்றன.எனவே, புதுச்சேரி அரசின் அனைத்து துறை அலுவலங்களிலும், இணையதளங்களிலும் குடிமக்கள் சாசனத்தை புதுப்பித்து பிராந்திய மொழிகள் மீண்டும் வைக்க வேண்டும். புதுச்சேரி காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாளத்திலும், ஏனாமில் தெலுங்கிலும் பார்வைக்கு வைக்க வேண்டும். இதன் மூலம் அரசின் திட்டங்கள் உயிர்ப்புடன் வேகமாக மீண்டும்மக்களை சென்றடையும். இது தொடர்பாக அந்தந்த துறை செயலர்கள் தலைமையில் கமிட்டி அமைத்து செயல்படுத்த வேண்டும்.

புத்தகம் வருமா?

அனைத்து துறைகளின் சேவைகள், அதற்கான நாட்கள் அடங்கிய மக்கள் சாசனப் புத்தகமாகதயாரிக்க வேண்டும்.அதனை அரசு துறைகள், நகராட்சி, கொம்யூன், பஞ்சாயத்திற்கு அனுப்ப வேண்டும். இதன்மூலம், நகரம்,கிராமத்துக்கு வேண்டிய திட்டங்களை கேட்டு பெறும் வாய்ப்பு, அவர்களுக்கு வழங்கப்படுகிறது.இணையத்திலும், மக்கள் சாசனம் வெளியிட்டு,பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த புத்தக வடிவிலான மக்கள் சாசன தகவல் களஞ்சியத்தை புதுச்சேரியின் அனைத்து நுாலகங்களிலும் வைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை