| ADDED : மார் 22, 2024 10:43 PM
புதுடில்லி: தாமஸ் கோப்பை பாட்மின்டன் தொடரில் இந்திய அணி எளிய பிரிவில் இடம் பெற்றுள்ளது.சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் அணிகளுக்கான 33வது தாமஸ் கோப்பை (ஆண்கள்), 30வது உபர் கோப்பை (பெண்கள்) தொடர், சீனாவின் செங்டுவில் (ஏப். 28-மே 5) நடத்தப்படுகிறது. மொத்தம் 32 அணிகள் மோத உள்ளன. இதற்கான பிரிவு நேற்று வெளியானது. இதன் படி தாமஸ் கோப்பை தொடரில் முதன் முறையாக கடந்த ஆண்டு சாதித்த 'நடப்பு சாம்பியன்' இந்திய ஆண்கள் அணி, 'சி' பிரிவில் 14 கோப்பை வென்ற இந்தோனேஷியா, தாய்லாந்து, இங்கிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இந்திய பெண்கள் அணி 'ஏ' பிரிவில், சீனா, சிங்கப்பூர், கனடாவுடன் இடம் பிடித்துள்ளது.