உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தீராத சோகத்தில் இந்திய அணி... * கவுகாத்தி டெஸ்டில் தப்புமா * தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்

தீராத சோகத்தில் இந்திய அணி... * கவுகாத்தி டெஸ்டில் தப்புமா * தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்

கவுகாத்தி: கவுகாத்தி டெஸ்டில் இமாலய இலக்கை விரட்டும் இந்திய அணி, விரைவாக விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது. தென் ஆப்ரிக்கா வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 489, இந்தியா 201 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 26/0 ரன் எடுத்து, 314 ரன் முன்னிலை பெற்று இருந்தது. கடின இலக்குநேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய பந்துவீச்சு எடுபடாததால், முதல் விக்கெட்டுக்கு மார்க்ரம், ரிக்கிள்டன் 59 ரன் சேர்த்தனர். ஜடேஜா 'சுழலில்' ரிக்கிள்டன் (35), மார்க்ரம் (29) வெளியேறினர். வாஷிங்டன் சுந்தர் வலையில் கேப்டன் பவுமா (3) சிக்கினார். ஜோர்ஜி, ஸ்டப்ஸ் சேர்ந்து அதிரடியாக ஆடினர். நான்காவது விக்கெட்டுக்கு 101 ரன் சேர்த்தனர். ஜடேஜா பந்தில் ஜோர்ஜி (49) அவுட்டானார். பின் 5வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ்-முல்டர் 82 ரன் சேர்த்தனர். ஜடேஜா பந்தில் போல்டான ஸ்டப்ஸ் (94 ரன், 9X4, 1X6) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை 260/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. முல்டர் (35) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியாவுக்கு 549 ரன் என்ற இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்தது.'சுழலில்' அசத்திய ஜடேஜா, 4 விக்கெட் கைப்பற்றினார்.ராகுல் ஏமாற்றம்கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க பேட்டர்கள் ஏமாற்றினர். யான்சென் 'வேகத்தில்' ஜெய்ஸ்வால் (13) நடையை கட்டினார். ஹார்மர் 'சுழலில்' ராகுல் (6) போல்டானார். நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 27/2 ரன் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் (2), 'நைட்வாட்ச்மேனாக' வந்த குல்தீப் யாதவ் (4) அவுட்டாகாமல் இருந்தனர். 'டிரா' முடியுமாஇந்திய வெற்றிக்கு இன்னும் 522 ரன் தேவை என்பதால், தென் ஆப்ரிக்க பிடியில் இருந்து தப்புவது கடினம். கவுகாத்தியில் விரைவில் சூரியன் மறையும். மாலை 3:45 மணிக்கு மேல் பந்துவீசுவது கடினம். கடந்த நான்கு நாளும் சராசரியாக 80 ஓவர் தான் வீசப்பட்டன. இது இந்திய அணிக்கு சாதகம். இன்றைய கடைசி நாளில் நமது பேட்டர்கள் தாக்குப்பிடித்தால் 'டிரா' செய்யலாம். தவறினால், டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழக்க நேரிடும். ஜடேஜா 50 விக்கெட்தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 50+ விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் ரவிந்திர ஜடேஜா (52 விக்.,) 5வது இடம் பெற்றார். முதல் நான்கு இடத்தில் கும்ளே (84), ஸ்ரீநாத் (64), ஹர்பஜன் (60), அஷ்வின் (57) உள்ளனர். * தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 50+ விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இடது கை ஸ்பின்னர் ஜடேஜா. இதற்கு முன் இங்கிலாந்தின் கோலின் பிலித், 59 விக்கெட் (1906-1910) வீழ்த்தி இருந்தார். வாய்ப்பு எப்படிஇந்திய அணி 549 ரன்னை எட்டுவது கடினம். டெஸ்ட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி தான் அதிகபட்சமாக 418/7 ரன் (எதிர், ஆஸி., செயின்ட் ஜான்ஸ், 2003) 'சேஸ்' செய்துள்ளது. * இந்திய அணி அதிபட்சமாக 406/4 ரன் (எதிர், வெ.இ., போர்ட் ஆப் ஸ்பெயின், 1976) 'சேஸ்' செய்தது. இந்திய மண்ணில் 387/4 (எதிர், இங்கிலாந்து, 2008, சென்னை) 'சேஸ்' செய்தது. * டெஸ்ட் அரங்கில் 5வது நாளில் 400+ ரன் ஒரே ஒரு முறை தான் 'சேஸ்' செய்யப்பட்டது. 1948ல் ஆஸ்திரேலியா அணி 404/3 ரன் (எதிர், இங்கிலாந்து, ஹெடிங்லி) எடுத்து இச்சாதனை படைத்தது. பயிற்சியாளர் சர்ச்சைதென் ஆப்ரிக்க அணி வலுவான ஸ்கோரை எட்டியும் 'டிக்ளேர்' செய்யாமல் தாமதம் செய்தது. இறுதியில் 549 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. இதன் காரணமாக இந்திய அணி ஒட்டுமொத்தமாக 229.4 ஓவர் பந்துவீச நேர்ந்தது. 'பீல்டிங்' செய்து சோர்ந்து போயினர். இது குறித்து தென் ஆப்ரிக்க தலைமை பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் கூறுகையில்,''இந்திய வீரர்கள் கால் வலிக்க 'பீல்டிங்' செய்ய வேண்டுமென விரும்பினோம். இதனால் தான் கூடுதல் நேரம் பேட் செய்தோம். போட்டியில் அவர்களுக்கு சிறிய வாய்ப்பு கூட கிடைக்க கூடாது என்பதே இலக்கு. மாலை நேரத்தில் ஆடுகளத்தின் மீது நிழல் தென்படும். இது வேகங்களுக்கு சாதகமானது. இதனால் தான் தாமதமாக 'டிக்ளேர்' செய்தோம்,''என்றார். இந்திய வீரர்கள் அதிக நேரம் பீல்டிங் செய்ய வேண்டும் என்பதற்கு 'தரையில் ஊர்ந்து செல்வது' என்ற அர்த்தம் கொண்ட வார்த்தையை பயன்படுத்தினார் கான்ராட். இதே வார்த்தையை 1976ல் இங்கிலாந்தின் டோனி கிரெய்க், வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக கூறினார். அப்போதைய நிறவெறி காலத்தில் அடிமைத்தனத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆத்திரமடைந்தனர். பின் டோனி கிரெய்க் மன்னிப்பு கோரினார். இப்போது கான்ராட் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.நம்பிக்கை''முதல் இரு நாளில் நாங்கள் பந்துவீசும் போது ஆடுகளத்தில் எந்த சேதமும் காணப்படவில்லை. கண்ணாடி போல பளபளப்பாக இருந்தது. தென் ஆப்ரிக்கா பந்துவீசிய போது மாற்றம் ஏற்பட்டிருந்தது. பந்துகள் 'பவுன்ஸ்' ஆகின. நன்கு சுழன்றன. இன்று இந்திய பேட்டர்களுக்கு முக்கியமான நாள். 'பாசிட்டிவ்' எண்ணத்துடன் முழு நாளும் பேட் செய்வது இலக்கு. போட்டியை டிரா செய்தால், அது வெற்றிக்கு சமம். இளம் வீரர்கள் இப்போது தான் சர்வதே போட்டியை கற்று வருகின்றனர். விரைவில் கடின சூழ்நிலையை சமாளிப்பர். இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. -ஜடேஜாஇந்திய அணி 'ஆல்-ரவுண்டர்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ