மேலும் செய்திகள்
வங்கதேச அணி ஆதிக்கம்: முஷ்பிகுர், லிட்டன் தாஸ் சதம்
18 hour(s) ago
கவுகாத்தி: இந்தியாவில் 'டி-20' உலக கோப்பை தொடர் 2026, பிப்ரவரி 7ல் துவங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கு முன் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா (டிச. 9, 11, 14, 17, 19), நியூசிலாந்து (2026, ஜன. 21, 23, 25, 28) அணிக்கு எதிராக மொத்தம் 10 'டி-20' போட்டியில் பங்கேற்க உள்ளது. இதன் பின் அடுத்த ஒருவாரத்தில் உலக கோப்பை தொடர் துவங்க உள்ளது. இதனால், நியூசிலாந்து, உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது.இதுகுறித்து வெளியான செய்தி:'உலக' தொடருக்கு முன் இந்தியா, 10 போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளது. இதன் பின் கால அவகாசம் குறைவாக உள்ளது. தவிர அணியின் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படாத பட்சத்தில், நியூசிலாந்து, உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பெரியளவு மாற்றம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 hour(s) ago