உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம்: ஆசிய கோப்பையில் மோதல்

அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம்: ஆசிய கோப்பையில் மோதல்

தம்புலா: ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோத உள்ளன. லீக் போட்டியில் வங்கதேச அணி 114 ரன் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.இலங்கையின் தம்புலாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 9வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், மலேசியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு திலாரா (33) நல்ல துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த முர்ஷிதா (80), கேப்டன் நிகர் சுல்தானா (62*) அரைசதம் கடந்தனர். வங்கதேச அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது.கடின இலக்கை விரட்டிய மலேசிய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 77 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. எல்சா ஹன்டர் (20), மஹிரா (15) ஆறுதல் தந்தனர்.இலங்கை அபாரம்: மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, தாய்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தாய்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 93 ரன் எடுத்தது. நன்னபட் (47*) ஆறுதல் தந்தார்.சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணி 11.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 94 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விஷ்மி (39*), கேப்டன் சமாரி (49*) அவுட்டாகாமல் இருந்தனர்.'பி' பிரிவு லீக் சுற்றில் முடிவில் இலங்கை (6 புள்ளி), வங்கதேசம் (4) அணிகள் முதலிரண்டு இடங்களை கைப்பற்றி அரையிறுதிக்குள் நுழைந்தன. நாளை நடக்கும் அரையிறுதியில் இந்தியா - வங்கதேசம், பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை