| ADDED : பிப் 06, 2024 09:47 PM
ஹராரே: 'டி-20' தொடரில் பங்கேற்ற இளம் இந்திய அணி, ஜிம்பாப்வே செல்ல உள்ளது.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் ஜூன் 1ல் துவங்குகிறது. ஜூன் 29ல் பைனல் பார்படாசில் நடக்கவுள்ளது. இதன் பின் இளம் வீரர்கள் இடம் பெற்ற இரண்டாம் தர இந்திய அணி, வெஸ்ட் இண்டீசில் இருந்து ஜிம்பாப்வே செல்கிறது. இங்கு ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது.போட்டிகள் அனைத்தும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஜூலை 6, 7, 10, 13, 14ல் நடக்கவுள்ளன.இதை இந்திய கிரிக்கெட் போர்டு, ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு இணைந்து வெளியிட்ட செய்தியில் உறுதி செய்தன.