உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... * டிராவிட் நெகிழ்ச்சி

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... * டிராவிட் நெகிழ்ச்சி

பார்படாஸ்: ''பயிற்சியாளராக தொடரும்படி ரோகித் சர்மா விடுத்த அழைப்பை மறக்க முடியாது. அவருக்கு நன்றி,'' என டிராவிட் தெரிவித்தார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், 51. கடந்த 2007ல் இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை தொடரில்(50 ஓவர்) இந்திய அணி லீக் சுற்றுடன் திரும்பியது.பின் 2021ல் இந்திய அணியின் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகளுக்கு டிராவிட் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியில் 2022ல் 'டி-20' உலக கோப்பை அரையிறுதியுடன் இந்தியா வெளியேறியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023) பைனலில் தோற்றது. 2023, நவம்பரில் ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதனால் விரக்தி அடைந்த டிராவிட், பதவி விலகும் முடிவில் இருந்தார். இவரது மனதை கேப்டன் ரோகித் சர்மா மாற்றியுள்ளார். இதற்கு பின் 2024 'டி-20' உலக கோப்பை வரை பணியில் நீடிக்க முன்வந்துள்ளார்.தற்போது இந்திய அணி 'டி-20' உலக கோப்பை வெல்ல, டிராவிட்டின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது. பயிற்சியாளர் பதவியில் இருந்து நிம்மதியாக விடைபெற உள்ளார்.பார்படாசில் இந்திய வீரர்களின் 'டிரஸ்சிங் ரூமில்' டிராவிட் நிகழ்த்திய பிரிவு உபசார உரை:கடந்த நவம்பரில் ரோகித் சர்மா, அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். பதவியில் தொடரும்படி வற்புறுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி. இதன் காரணமாக, உலக கோப்பை வென்ற வரலாற்று சிறப்புமிக்க இந்திய அணியில் பயிற்சியாளராக இடம் பெற முடிந்தது. அணியின் நலனுக்காக நானும் ரோகித்தும் நிறைய விவாதித்து இருக்கிறோம். பல விஷயங்களில் ஒத்துப் போயிருக்கிறோம். ஒன்றிணைந்து செயல்பட்டதற்காக மீண்டும் அவருக்கு நன்றி.நீங்கா நினைவுகள்உலக கோப்பை வென்ற தருணத்தை வீரர்கள் அனைவரும் கொண்டாடி மகிழுங்கள். கிரிக்கெட் வாழ்வில் நீங்கள் எடுத்த ரன், வீழ்த்திய விக்கெட்டுகள் முக்கியமல்ல. களத்தில் நிகழ்ந்த நினைவுகள் தான் முக்கியம். உலக கோப்பை வென்ற தருணத்தை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கலாம். உங்களுடன் உலக கோப்பை நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் எனக்கும் பெருமை. என்னிடம் அனைவரும் மரியாதையுடன் நடந்து கொண்டீர்கள்.கடந்த சில ஆண்டுகளாக பைனல் வரை வந்து கோப்பையை நழுவவிட்டோம். இம்முறை உறுதியுடன் போராடி வென்றுள்ளோம். இதற்காக ஒவ்வொரு வீரர்களும் பல தியாகங்களை செய்துள்ளனர். நீங்கள் கோப்பை வெல்வதற்காக பெற்றோர், பயிற்சியாளர், சகோதரர், மனைவி, குழந்தைகள் என ஏராளமானோர் தியாகம் செய்துள்ளனர். அணியின் வெற்றிக்கு நல்ல நிர்வாகமும் அவசியம். அணிக்கு உறுதுணையாக இருந்த பி.சி.சி.ஐ.,க்கு எனது பாராட்டு.இவ்வாறு டிராவிட் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ