வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை
நவி மும்பை: இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய உலக கோப்பை லீக் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. இதன் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றன.நவி மும்பையில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார். வங்கதேச அணி 12.2 ஓவரில் 39/2 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. மழை நின்ற பின், 27 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. ஷர்மின் அக்தர் (36), சோபனா (26) ஆறுதல் தர, வங்கதேச அணி 27 ஓவரில் 119/9 ரன் எடுத்தது. அபாரமாக பந்துவீசிய இந்தியாவின் ராதா யாதவ் 3, ஸ்ரீ சரணி 2 விக்கெட் வீழ்த்தினர்.இந்தியாவின் வெற்றிக்கு 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 27 ஓவரில், 126 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. இந்திய அணி 8.4 ஓவரில் 54/0 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, போட்டியை பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஸ்மிருதி மந்தனா (34), அமன்ஜோத் கவுர் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.நியூசி., ஏமாற்றம்விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. ஜார்ஜியா (43), அமேலியா கெர் (35) கைகொடுக்க, நியூசிலாந்து அணி 39.2 ஓவரில் 168 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு அமி ஜோன்ஸ் (86*), டாமி பியூமன்ட் (40), ஹீதர் நைட் (33) நம்பிக்கை தந்தனர். இங்கிலாந்து அணி 29.2 ஓவரில் 172/2 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அருமை