மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
21 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
மக்காய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பெண்கள் அணி 171 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது போட்டி மக்காய் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.இந்திய அணிக்கு கிரண் (25), உமா செத்ரி (16) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய தேஜல் ஹசாப்னிஸ் (50), ராகவி பிஷ்ட் (53) அரைசதம் விளாசினர். சஜீவன் சஜனா (40), கேப்டன் மின்னு மணி (34) கைகொடுத்தனர். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 243 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு பிரியா மிஷ்ரா தொல்லை தந்தார். இவரது 'சுழலில்' மேடி டார்கே (22), டெஸ் பிளிண்டாப் (20), நிகோல் பால்தும் (2), கேட்டி பீட்டர்சன் (1), நிகோலா ஹான்காக் (0) சிக்கினர். மின்னு மணி பந்தில் மைட்லன் பிரவுன் (5), லில்லி மில்ஸ் (0) அவுட்டாகினர். ஆஸ்திரேலிய அணி 22.1 ஓவரில் 72 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் பிரியா 5, மின்னு மணி 2 விக்கெட் சாய்த்தனர்.ஆஸ்திரேலிய அணி 2-1 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
21 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1