சென்னை: சென்னை டெஸ்டில் இரட்டை சதம் விளாசினார் ஷபாலி வர்மா. இந்திய அணி முதல் இன்னிங்சில் 525/4 ரன் குவித்தது.இந்தியா, தென் ஆப்ரிக்க பெண்கள் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி (4 நாள்) சென்னையில் நேற்று துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பேட்டிங் தேர்வு செய்தார்.சூப்பர் துவக்கம்இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஷபாலி, டெஸ்ட் அரங்கில் முதல் சதம் கடந்தார். மந்தனா தன் பங்கிற்கு, டெஸ்ட் அரங்கில் இரண்டாவது சதம் எட்டினார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கடந்த 4 போட்டியில் (117, 136, 90, 149) இவர் அடித்த 3வது சதம் இது. தவிர, டெஸ்டில் 500 ரன் எடுத்த 9 வது இந்திய வீராங்கனை ஆனார் மந்தனா.முதல் விக்கெட்டுக்கு 292 ரன் சேர்த்த போது, மந்தனா 149 ரன்னில் அவுட்டானார். சுபா (15) நிலைக்கவில்லை.ஷபாலி 'டபுள்'ஷபாலி, ஜெமிமா இணைந்தனர். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஷபாலி, தெல்மி ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்சர் அடித்தார். இவர் 194வது பந்தில் இரட்டை சதம் எட்டினார். ஷபாலி 205 ரன் எடுத்த போது, துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். இதன் பின் அணியின் ரன்வேகம் சற்று குறைந்தது.மறுபக்கம் ஜெமிமா, டெஸ்டில் தனது மூன்றாவது அரைசதம் கடந்தார். இவர் 55 ரன்னில் அவுட்டானார். பின் வந்த ரிச்சா, வேகமாக ரன் சேர்க்க, இந்திய அணியின் ஸ்கோர் 500 ரன்களை கடந்தது.முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 525 ரன் குவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் (42), ரிச்சா (43) அவுட்டாகாமல் இருந்தனர்.20குறைந்த வயதில் (20 வயது, 152 நாள்) டெஸ்டில் 500 ரன் எட்டினார் ஷபாலி.* டெஸ்டில் குறைந்த வயதில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார் ஷபாலி. முதலிடத்தில் மிதாலி ராஜ் (19 வயது, 254 நாள்) உள்ளார்.194டெஸ்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீராங்கனை ஆனார் ஷபாலி (194 பந்து). முன்னதாக அன்னாபெல் (ஆஸி.,) 248 பந்தில் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார்.* மிதாலி ராஜூக்கு அடுத்து டெஸ்டில் இரட்டை சதம் அடித்த இந்திய வீராங்கனை ஷபாலி.* டெஸ்டில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இரண்டாவது இந்திய வீராங்கனை ஷபாலி (205). முதலிடத்தில் மிதாலி (214) உள்ளார்.292டெஸ்ட் அரங்கில் மந்தனா- ஷபாலி முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் (292) சேர்த்து சாதனை படைத்தனர். முன்னதாக சஜிதா-கிரண் (பாக்.,) 241 ரன் (கராச்சி, எதிர்-வெ.இண்டீஸ்) எடுத்திருந்தனர்.* இந்திய டெஸ்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் (292) இது.* சர்வதேச அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் ஆனது. முதலிடத்தில் 309 ரன் குவித்த ரீலர்-அன்னெட்ஸ் (ஆஸி.,) ஜோடி (எதிர்-இங்கிலாந்து, 1987) உள்ளது.525இந்திய அணி நேற்றைய முதல் நாளில் 525/4 ரன் குவித்தது. பெண்கள் டெஸ்டில் ஒரே நாளில் எடுக்கப்பட்ட அதிக ரன் இது. 89 ஆண்டுக்கு முன் (1935) இங்கிலாந்து 431/2 ரன் (எதிர்-நியூசி.,) எடுத்ததே அதிகமாக இருந்தது.சேவக் போல...கடந்த 2008ல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய டெஸ்ட் சென்னையில் நடந்தது. துவக்க வீரர் சேவக், 193 ரன் எடுத்த போது சிக்சர் அடித்தார். பின் 3 ரன் எடுத்து 194 வது பந்தில் இரட்டை சதம் கடந்தார்.* இதுபோல் தற்போது சென்னை டெஸ்டில் இந்தியா, தென் ஆப்ரிக்க பெண்கள் அணிகள் மோதுகின்றன. துவக்க வீராங்கனை ஷபாலி, 187 ரன் எடுத்த போது, அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்தார். பின் 1 ரன் எடுத்து, சேவக் போல 194வது பந்தில் இரட்டை சதம் எட்டியது, ஸ்பெஷலாக இருந்தது.