உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / எழுச்சி பெறுமா இந்திய பேட்டிங் * இலங்கையுடன் இன்று கடைசி மோதல்

எழுச்சி பெறுமா இந்திய பேட்டிங் * இலங்கையுடன் இன்று கடைசி மோதல்

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்திய பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டால், தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பலாம்.இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி சமன் ஆனது. இரண்டாவது போட்டியில் 32 ரன்னில் இந்தியா தோற்க, 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது. இதில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா களமிறங்குகிறது. ரோகித் நம்பிக்கைஇந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தருகிறது. கடந்த இரு போட்டியில் ரோகித், இரு அரைசதம் அடித்த போதும், பின் வரும் பேட்டர்கள் தொடர்ந்து ஏமாற்றுவதால், இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. பிரேமதாசா மைதானத்தில் பந்துகள் அதிகமாக சுழல்வதால், இதை சரியாக கணித்து விளையாட தடுமாறுகின்றனர் இந்திய பேட்டர்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி, இரு போட்டியில் 38 ரன் தான் எடுத்தார். இங்கு 4 சதம் அடித்த அனுபவம் கொண்ட கோலி, இன்று எழுச்சி பெற வேண்டும். வழக்கமான சுழற்பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளும் ஷிவம் துபே, இங்கு தடுமாறி விக்கெட்டுகளை இழப்பது ஏமாற்றம் தருகிறது. ஸ்ரேயாஸ் (30), ராகுல் (31) என முன்னணி வீரர்கள் பலரும் இன்று சுதாரித்துக் கொண்டு இந்தியாவுக்கு வெற்றி கொண்டு வரவேண்டும். பவுலர்கள் ஏமாற்றம்பவுலர்களை பொறுத்தவரையில் துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், கடைசி நேரத்தில் விக்கெட் வீழ்த்த திணறுகின்றனர். முதல் இரு போட்டியில் 142/6, 136/6 என இருந்த போதும், 230/8, 240/9 ரன் எடுத்த அனுமதித்தனர். வாஷிங்டன் சுந்தர் (4 விக்.,), குல்தீப் (3), அக்சர் படேல் (3) இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். வேகத்தில் அர்ஷ்தீப் சிங் (2), சிராஜ் (2) பெரியளவு செயல்படாதது அதிர்ச்சி தருகிறது.சுழல் பலம்இலங்கை அணிக்கு வெல்லலாகே (106 ரன்), நிசங்கா (56) பேட்டிங்கில் அணிக்கு கைகொடுக்கின்றனர். கடந்த போட்டியில் 6 விக்கெட் சாய்த்த சுழற்பந்து வீச்சாளர் வாண்டர்சே, அசலங்கா (6), ஹசரங்கா (3) என பலரும் கைகொடுப்பது கூடுதல் பலம். 27 ஆண்டுக்குப் பின்...ஒருநாள் அரங்கில் சச்சின் தலைமையிலான இந்திய அணி, 1997ல் ரணதுங்காவின் இலங்கை அணியிடம் 0-3 என தோற்றது. இதன் பின் இரு அணிகள் மோதிய 11 தொடரிலும் இந்தியா வெற்றி பெற்றது. இன்று ஏமாற்றும் பட்சத்தில் 27 ஆண்டுக்குப் பின் தொடரை இழக்கும் அபாயம் ஏற்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ