உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / நெல்லை கலக்கல் வெற்றி: சேலம் அணி ஏமாற்றம்

நெல்லை கலக்கல் வெற்றி: சேலம் அணி ஏமாற்றம்

சேலம்: அஜிதேஷ், சூர்யபிரகாஷ் கைகொடுக்க நெல்லை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சேலத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலம், நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.சேலம் அணிக்கு அபிஷேக் (6) ஏமாற்றினார். கவின் (16), விவேக் (13), விஷால் (12) நிலைக்கவில்லை. ராபின் பிஸ்ட் (23), கேப்டன் ஷிஜித் சந்திரன் (20) ஆறுதல் தந்தனர். சோனு யாதவ் பந்தில் சன்னி சாந்து (14), முகமது அத்னன் கான் (11), பொய்யாமொழி (0) அவுட்டாகினர். ஹரிஷ் குமார் (17) கைகொடுத்தார்.சேலம் அணி 19.2 ஓவரில் 141 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 5 விக்கெட் சாய்த்தார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் (11) சுமாரான துவக்கம் கொடுத்தார். குருசாமி அஜிதேஷ் (45) நம்பிக்கை தந்தார். நிதிஷ் ராஜகோபால் (19) ஓரளவு கைகொடுத்தார். பொய்யாமொழி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சூர்யபிரகாஷ் வெற்றியை உறுதி செய்தார்.நெல்லை அணி 18.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யபிரகாஷ் (43), அருண் குமார் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி