மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
3 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
நியூயார்க்: உலக கோப்பை தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 93.5 கோடி என ஐ.சி.சி., அறிவித்தது.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான பரிசுத் தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது. கடந்த முறை ரூ. 47 கோடி வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 20 அணிகள் பங்கேற்பதால் மொத்த பரிசுத் தொகை ரூ. 93.5 கோடியாக உயர்ந்துள்ளது. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 20.4 கோடி கிடைக்கும். கடந்த 2022ல் ரூ. 13.3 கோடி தரப்பட்டது. அரையிறுதியுடன் வெளியேறும் 2 அணிகளுக்கு தலா ரூ. 6.5 கோடி கிடைக்கும். 'சூப்பர் 8' சுற்றுடன் கிளம்பும் 4 அணிகளுக்கு தலா ரூ. 3.2 கோடி தரப்படும். 9 முதல் 12 வரையிலான இடங்களை பெறும் அணிகளுக்கு தலா ரூ. 2 கோடி கிடைக்கும். மீதமுள்ள 8 அணிகள் தலா ரூ. 1.87 கோடி கொண்டு செல்லும். தவிர லீக், 'சூப்பர் 8' சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு அணி ரூ. 28 லட்சம் பெறும்.
3 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1