மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
1 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
டல்லாஸ்: 'டி-20' உலக கோப்பையில் அமெரிக்காவிடம், பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. அமெரிக்காவின் டல்லாசில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற அமெரிக்க அணி கேப்டன் மோனக் படேல், பீல்டிங் தேர்வு செய்தார். ஷதாப் விளாசல்பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் (9), கேப்டன் பாபர் ஆசம் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. உஸ்மான் கானும் 3 ரன்னில் அவுட்டானார். பகர் ஜமான் (11) அணியை கைவிட்டார். பாகிஸ்தான் அணி 26/3 ரன் என திணறியது. பின் இணைந்த பாபர் ஆசம், ஷதாப் கான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நான்காவது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்த போது, ஷதாப் கான் (40 ரன், 25 பந்து) அவுட்டானார். ஆசம் கான் 'டக்' அவுட்டாக, இப்திகார் அகமது 18 ரன் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159/7 ரன் எடுத்தது. அமெரிக்கா சார்பில் கென்ஜீ 3 விக்கெட் சாய்த்தார். அமெரிக்க அணிக்கு மோனக் படேல் (50), ஆன்ட்ரிஸ் (35) உதவினர். கடைசி ஓவரில் அமெரிக்கா வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டன. ஹாரிஸ் வீசிய முதல் 3 பந்தில் 1, 1, 1 ரன் எடுக்கப்பட்டன. 4வது பந்தில் ஜோன்ஸ், சிக்சர் அடித்தார். 5வது பந்தில் 1 ரன் எடுத்தார். கடைசி பந்தில் நிதிஷ், பவுண்டரி அடிக்க, போட்டி 'டை' ஆனது. அமெரிக்கா 20 ஓவரில் 159/3 ரன் எடுத்தது. 'திரில்' வெற்றிவெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது. முதலில் களமிறங்கிய அமெரிக்கா, ஒரு ஓவரில் 18/1 ரன் (4, 2, 1, 2 வைடு, 1, 2 வைடு, 2, 3 வைடு, 1 அவுட்) எடுத்தது. பாகிஸ்தான் முதல் 2 பந்தில் 5 ரன் (0, 4, 1 வைடு) எடுத்தது. 3வது பந்தில் இப்திகார் (4) அவுட்டானார். அடுத்த 3 பந்தில் 7 ரன் கிடைத்தன (1 வைடு, 4, 2). கடைசி பந்தில் 7 ரன் தேவை என்ற நிலையில், 1 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. பாகிஸ்தான் ஒரு ஓவரில் 13/1 ரன் எடுத்து, 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
1 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1