மேலும் செய்திகள்
தமிழக அணிகள் திணறல்
27-Aug-2025
சென்னை: புச்சி பாபு கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழக பிரசிடென்ட் லெவன் அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் மும்பை, மகாராஷ்டிரா, தமிழக கிரிக்கெட் சங்க பிரசிடென்ட் லெவன், தமிழக கிரிக்கெட் சங்க லெவன் உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.இதன் லீக் போட்டியில் டி.என்.சி.ஏ., பிரசிடென்ட் லெவன், சத்தீஸ்கர் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் பிரசிடென்ட் லெவன் 266, சத்தீஸ்கர் 187 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் பிரசிடென்ட் லெவன் அணி 81/7 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் பிரதோஷ் ரஞ்சன் பால் தலைமையிலான பிரசிடென்ட் லெவன் அணி 2வது இன்னிங்சில் 121 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின் 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சத்தீஸ்கர் அணி, 2வது இன்னிங்சில் 141 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பிரசிடென்ட் லெவன் அணி சார்பில் வித்யுத், ஹேம்சுதேஷன் தலா 5 விக்கெட் சாய்த்தனர்.மற்றொரு லீக் போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான டி.என்.சி.ஏ., லெவன் அணி (203/10, 213/10) 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் அணியிடம் (241/10, 179/4) தோல்வியடைந்தது.
27-Aug-2025