உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வெஸ்ட் இண்டீசின் பெஸ்ட் பவுலர் ஜோசப்

வெஸ்ட் இண்டீசின் பெஸ்ட் பவுலர் ஜோசப்

பிரிஸ்பேன்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் ஷமர் ஜோசப். சோதனைகளை கடந்து சாதனை வீரராக ஜொலிக்கிறார்.ஆஸ்திரேலியா சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் தோற்றது. இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. மூன்றாவது நாள் மாலையில் பேட் செய்த போது 'யார்க்கர்' பந்து தாக்க, வலது கால் விரல் வலியால் துடித்த வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 25, 'ரிட்டயர்டு ஹர்ட்' ஆனார்.மறுநாள் வலியுடன் பந்து வீசிய ஷமர், 7 விக்கெட் சாய்த்து பகலிரவு டெஸ்டில் முதன் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த கைகொடுத்தார்.27 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் வெற்றிபெற்றதுவெஸ்ட் இண்டீஸ்.ஷமர் ஜோசப் குறித்து அவரது உறவினர் ஆர்லண்டே டன்னர் கூறியது:வெஸ்ட் இண்டீசின் கயானாவில் உள்ளது சிறிய கிராமம் பராகரா. நீர்வழியாக மட்டும் தான் செல்ல முடியும். 2018ல் தான் இங்கு இணையதள வசதி வந்தது. 2 மணி நேரம் படகில் பயணம் செய்தால், அருகிலுள்ள (225 கி.மீ.,) பெரிய நகரம் புதிய ஆம்ஸ்டர்டாமை அடையலாம். மொத்தம் 400 பேர் தான் மக்கள் வசிக்கின்றனர். இதில் இருந்து வந்தவர் தான் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப்.இவரது வீட்டு முன் தான் கிரிக்கெட் விளையாடுவோம். அருகில் நீர் இருக்கும். எங்கள் பகுதி 'ரிமோட் ஏரியா' என்பதால் பந்துகள் கிடைக்காது. பந்து வடிவத்தில் எது கிடைத்தாலும் சரி, விளையாடுவோம். பழங்களை பயன்படுத்துவோம். சில நேரங்களில் பிளாஸ்டிக் பாட்டிலை உருக்கி பந்தாக மாற்றி விளையாடுவோம்.இங்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்பதால் சனிக்கிழமை, சர்ச்சிற்கு மட்டும் தான் செல்ல வேண்டும். 'டிவி' பார்க்க, விளையாட பெற்றோர், அனுமதிக்க மாட்டர். பத்தாண்டுக்கு முன் கயானா முன்னாள் வீரர், தற்போது தொழிலதிபராக உள்ள டேமியன் வன்டல், பராகரா தீவுக்கு சென்ற போது, 14 வயதான ஷமரை சந்தித்தார். இவர் தான், பராகரா தீவில் இருந்து ஷமரை வெளியே கொண்டு வந்தார். பின் செக்யூரிட்டியாக பணியில் சேர்ந்து, கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபட்டார். ஜூனியர் கிரிக்கெட்டில் விளையாடியது இல்லை. முதல் தர போட்டி அனுபவம் அதிகம் இல்லை.எனினும், தற்போது 2 டெஸ்டில் 13 விக்கெட் சாய்த்து தொடர் நாயகனாக ஜொலித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி