உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கோவா அணி சாம்பியன்: சூப்பர் கோப்பை கால்பந்தில்

கோவா அணி சாம்பியன்: சூப்பர் கோப்பை கால்பந்தில்

படோர்டா: சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் கோவா அணி சாம்பியன் ஆனது. பரபரப்பான பைனலில், 6-5 என 'சடன்-டெத்' முறையில் ஈஸ்ட் பெங்கால் அணியை வென்றது.கோவாவில், அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் சூப்பர் கோப்பை கால்பந்து 6வது சீசன் நடந்தது. படோர்டாவில் நடந்த பைனலில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. பின், இரு அணிகளுக்கும் 30 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் முடிவில் போட்டி 0-0 என மீண்டும் சமநிலை வகித்தது.இதனையடுத்து போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இரு அணிகளும் தலா 4 கோல் மட்டும் அடித்ததால், போட்டியின் முடிவு 'சடன்-டெத்' முறைக்கு சென்றது. இதன் முதல் வாய்ப்பில் சாஹில் தவோரா (கோவா), ஹமித் அஹாதத் (ஈஸ்ட் பெங்கால்) கோல் அடித்தனர். இரண்டாவது வாய்ப்பில் கோவாவின் உதாண்டா சிங் கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் வீரர் விஷ்ணு ஏமாற்றினார்.முடிவில் கோவா அணி 6-5 என்ற கணக்கில் 'சடன்-டெத்' முறையில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக (2019, 2025, 2025-26) கோப்பை வென்றது. தவிர கோவா அணி, ஆசிய சாம்பியன்ஸ் லீக்-2 (2026-27) 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை