உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அரையிறுதியில் அபே சிங்

அரையிறுதியில் அபே சிங்

டொரன்டோ: சாலஞ்சர் டூர் ஸ்குவாஷ் தொடரின் அரையிறுதிக்கு அபே சிங் முன்னேறினார். டொரன்டோவில் சர்வதேச கிளாசிக் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், உலக தரவரிசையில் 66 வது இடத்திலுள்ள இந்தியாவின் அபே சிங், பிரான்சின் மேக்சியோ லெவியை சந்தித்தார். முதல் செட்டில் போராடயி அபே சிங் 13-11 என வென்றார். அடுத்த செட்டை 11-7 என கைப்பற்றிய இவர், மூன்றாவது செட்டை 11-3 என எளிதாக வசப்படுத்தினார். 33 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் அபே சிங் 13-11, 11-7, 11-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இவர், அரையிறுதியில் எகிப்தின் அப்டெலாலெக்கை எதிர்கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி