| ADDED : ஜூன் 18, 2024 10:40 PM
ஜெர்முக்: ஆர்மேனிய செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் சாம்பியன் ஆனார்.ஆர்மேனியாவில் ஸ்டீபன் அவக்யான் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்றனர். மொத்தம் 9 சுற்றுகள் நடந்தன. 7 சுற்று முடிவில் 3 வெற்றி, 4 'டிரா' செய்த அர்ஜுன், எட்டாவது சுற்றில் ரஷ்யாவின் வோலோடெர் மர்ஜினை சந்தித்தார்.வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், போட்டியின் 40 நகர்த்தல் வரை சமநிலையில் இருந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், 63வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அர்ஜுன், ஆர்மேனியாவின் மானுயல் மோதிய 9வது, கடைசி சுற்று போட்டி 'டிரா' ஆனது.9 சுற்று முடிவில் 4 வெற்றி, 5 'டிரா' செய்த அர்ஜுன், 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் செவியன் (5.0), ஈரானின் அமின் (5.0) அடுத்த இரண்டு இடம் பிடித்தனர்.