உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வைஷாலி ஹாட்ரிக் வெற்றி

வைஷாலி ஹாட்ரிக் வெற்றி

பையல்: சுவிட்சர்லாந்து செஸ் தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார் வைஷாலி.சுவிட்சர்லாந்தில் சர்வதேச 'பையல் பெஸ்டிவல்' செஸ் தொடர் நடக்கிறது. கிராண்ட்மாஸ்டர் சாலஞ்சர், கிளாசிக் பிரிவில் இந்தியா சார்பில் வைஷாலி பங்கேற்கிறார். முதல் இரு சுற்றில் வெற்றி பெற்ற வைஷாலி, மூன்றாவது சுற்றில் உக்ரைன் வீரர் இகோரை எதிர்கொண்டார். இதில் வைஷாலி கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். போட்டியின் 40 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பங்கேற்ற மூன்று போட்டியில் அசத்தி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இவர் 12 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். 'கிராண்ட்மாஸ்டர் டிரையாத்லான்' பிரிவில் (கிளாசிக்), இந்திய வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்கிறார். மூன்றாவது சுற்றில் ஆர்மேனியாவின் ஹெய்க்கை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 40 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். மூன்று சுற்றில் 2 'டிரா', 1 தோல்வியுடன் பிரக்ஞானந்தா (3.0 புள்ளி) நான்காவது இடத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை