உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: நிகால் சரின் சாம்பியன்

செஸ்: நிகால் சரின் சாம்பியன்

புக்கரெஸ்ட்: ருமேனிய கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் நிகால் சரின் சாம்பியன் பட்டம் வென்றார்.ருமேனியாவில் கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் நிகால் சரின், நாராயணன் லினா பங்கேற்றனர். பத்து சுற்றுகளின் முடிவில் 7 வெற்றி, 3 'டிரா' என தலா 8.5 புள்ளிகளுடன் நிகால் சரின், ஹங்கேரியின் இம்ரே பலோக் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர். அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அசத்திய நிகால் சரின் வெற்றி பெற்று, 9.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இத்தொடரில் நிகால் சரின் தோல்வியை சந்திக்கவில்லை. 'டை பிரேக்கர்' உட்பட 11 போட்டியில், 8 வெற்றி, 3 'டிரா'வை பதிவு செய்தார்.மற்றொரு இந்திய வீரர் நாராயணன் லினா 7 புள்ளிகளுடன் 19வது இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை