மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
வார்சா: கிராண்ட் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 4வது இடம் பிடித்தார். நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.போலந்தில் கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடந்தது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன், நார்வேயின் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றனர். இதன் 'பிளிட்ஸ்' பிரிவு 10வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் 28வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் பிரக்ஞானந்தா, போலந்தின் டுடா மோதிய போட்டி 'டிரா' ஆனது. மற்றொரு இந்திய வீரர் குகேஷ், சீனாவின் வெய் இயிடம் தோல்வியடைந்தார்.அடுத்த சுற்றில் பிரக்ஞானந்தா, நார்வேயின் கார்ல்சனிடம் தோல்வியடைந்தார். குகேஷ், சகவீரர் அர்ஜுனை தோற்கடித்தார். 12வது சுற்றில் பிரக்ஞானந்தா, அனிஷ் கிரியை வென்றார். குகேஷ், அர்ஜுன் தோல்வியை தழுவினர். பிரக்ஞானந்தாவுக்கு எதிரான 13வது சுற்றில் அர்ஜுன் வெற்றி பெற்றார். ருமேனியாவின் கிரில் ஷெவ்செங்கோவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்றார்.'பிளிட்ஸ்' பிரிவில் மொத்தம் நடந்த 18 சுற்றுகளின் முடிவில் 14.0 புள்ளிகளுடன் கார்ல்சன் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை சீனாவின் வெய் இ (12.5 புள்ளி), டுடா (10.5) கைப்பற்றினர். இந்தியாவின் அர்ஜுன் (10.0) 4வது இடத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீரர்களான பிரக்ஞானந்தா (9.0), குகேஷ் (5.5) முறையே 6, 10வது இடம் பிடித்தனர்.'ரேபிட்', 'பிளிட்ஸ்' பிரிவின் முடிவில் ஒட்டுமொத்தமாக 26 புள்ளி (12+14) பெற்ற கார்ல்சன் மீண்டும் சாம்பியன் ஆனார். இந்தியாவின் பிரக்ஞானந்தா (19), அர்ஜுன் (18) முறையே 4, 5வது இடம் பிடித்தனர். குகேஷ் (12.5) 10வது இடம் பிடித்தார்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025