உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / கோப்பை வென்றார் சிந்தரோவ் * உலக செஸ் தொடரில் சாதனை

கோப்பை வென்றார் சிந்தரோவ் * உலக செஸ் தொடரில் சாதனை

கோவா: கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடந்தது. மொத்தம் 206 பேர் பங்கேற்றனர். உலக சாம்பியன் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி உட்பட 24 பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர். இதில் யாரும் அரையிறுதிக்கு முன்னேறவில்லை. பைனலில் உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், சீனாவின் வெய் இ மோதினர். இவர்கள் மோதிய இரண்டு போட்டியும் 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமனில் இருந்தது.நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது. இதன் முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய சிந்தரோவ், 60வது நகர்த்தலில் வென்றார். முடிவில் 2.5-1.5 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். தவிர இளம் வயதில் (19) உலக கோப்பை வென்ற வீரர் என சாதனை படைத்தார். இவருக்கு ரூ. 1 கோடி பரிசு கிடைத்தது.வெய் இ, ரூ. 76 லட்சம், 3வது இடம் பெற்ற எசிபென்கோ, ரூ. 54 லட்சம் பரிசு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ