உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சென்னையை வீழ்த்தியது குஜராத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

சென்னையை வீழ்த்தியது குஜராத்: அல்டிமேட் டேபிள் டென்னிசில்

ஆமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 7-8 என ஆமதாபாத்திடம் தோல்வியடைந்தது.ஆமதாபாத்தில் (குஜராத்), அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் சென்னை, ஆமதாபாத் அணிகள் மோதினர். ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ஆமதாபாத்தின் ரிக்கார்டோ வால்டர் 3-0 என சென்னையின் பயாஸ் ஜெயினை வீழ்த்தினார். பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் அய்ஹிகா முகர்ஜி (ஆமதாபாத்) 2-1 என பைஸ்யாவை (சென்னை) வென்றார். கலப்பு இரட்டையர் போட்டியில் ஆமதாபாத்தின் அய்ஹிகா, வால்டர் ஜோடி 2-1 என பைஸ்யா, கிரில் ஜெராசிமென்கோ ஜோடியை (சென்னை) தோற்கடித்தது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் சென்னையின் கிரில் ஜெராசிமென்கோ 2-1 என ஸ்னேஹித்தை (ஆமதாபாத்) வென்றார். பெண்கள் ஒற்றையர் 2வது போட்டியில் சென்னையின் சிகி 3-0 என பிக்கோலினை (ஆமதாபாத்) வீழ்த்தினார்.முடிவில் சென்னை அணி 7-8 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை