| ADDED : மே 06, 2024 10:56 PM
ராஞ்சி: தேசிய பெண்கள் ஹாக்கி லீக் போட்டியில் பெங்கால், ஒடிசா அணிகள் வெற்றி பெற்றன.ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் பெங்கால், மிசோரம் அணிகள் மோதின. ஷிவானி குமாரி (18வது நிமிடம்) கைகொடுக்க பெங்கால் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் ஒடிசா, மகாராஷ்டிரா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஒடிசா அணி 2-1 என வெற்றி பெற்றது. ஒடிசா அணிக்கு திபி மோனிகா (23வது நிமிடம்), கருணா மின்ஸ் (55வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். மகாராஷ்டிரா அணிக்கு சுனிதா குமாரி (51வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.மத்திய பிரதேச அணி 6-2 என மணிப்பூர் அணியை வென்றது. மத்திய பிரதேச அணிக்கு பூமிக் ஷா சாஹு (19வது நிமிடம்), சான்ஸ்கிருதி சர்வான் (22, 29வது), சோனியா கும்ரே (34வது), ரிதன்யா சாஹு (38வது), ஆஞ்சல் சாஹு (48வது) கைகொடுத்தனர். மணிப்பூர் அணிக்கு சாலு (35, 53வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.இதுவரை முடிந்த போட்டிகளின் முடிவில் ஒடிசா (12 புள்ளி), மத்திய பிரதேசம் (11), ஜார்க்கண்ட் (10) அணிகள் 'டாப்-3' வரிசையில் உள்ளன.