உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவில் ஜூனியர் உலக ஹாக்கி

இந்தியாவில் ஜூனியர் உலக ஹாக்கி

புதுடில்லி: இந்தியாவில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் 2025ல் நடக்கவுள்ளது.சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் (21 வயதுக்குட்பட்ட) நடத்தப்படுகிறது. இதன் 14வது சீசன் 2025, டிசம்பர் மாதம் இந்தியாவில் நடக்க உள்ளது. முதன் முறையாக இத்தொடரில் கூடுதலாக 8 அணிகள் சேர்த்து, 24 அணிகள் பங்கேற்க உள்ளன.முன்னதாக டில்லி (2013), லக்னோ (2016), புவனேஸ்வர் (2021) என இந்தியாவில் மூன்று முறை இத்தொடர் நடந்தன. இதில் 2016ல் இந்தியா சாம்பியன் ஆனது. இந்திய சீனியர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அந்த அணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது இந்தியாவில் நான்காவது முறையாக ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கே கூறியது: சர்வதேச ஹாக்கி அமைப்பு எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது மகிழ்ச்சி. ஜூனியர் உலக கோப்பை தொடர், ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக இருக்கும். இந்தியா, உலகளவில் உள்ள புதிய தலைமுறை வீரர்களுக்கு துாண்டுகோலாக அமையும். இத்தொடரை சிறப்பான முறையில் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை